இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி
இந்தியா மற்றும் இலங்கை அணியினர்களுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மட்டும் இறுதி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.