15 மில்லியன் டாலர் மதிப்புள்ள 440 கேரட் வைரம் கண்டுபிடிப்பு
கடந்த 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் 217 கேரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் 440 கேரட் வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தின் மதிப்பு 15 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.103 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் உள்ள அங்கோலா என்ற பகுதியில் உள்ள வைரச்சுரங்கத்தில் இந்த அபூர்வ வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்லது. மிக அதிக தரத்தில் உள்ள இந்த வைரம் 3 இன்ச் நீளத்தில் தூய வெண்மை நிறத்தில் உள்ளது. இந்த வைரம் மிக விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 1905ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 3,106 கேரட் வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய நிலையில் மிக அதிக கேரட் உள்ள வைரம் ஆகும். இதனை அடுத்து 1,111 கேரட் வைரம் ஒன்றும் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கபட்டது.