ஆண்களின் சில்மிஷங்களை சமாளிக்க பெண்களுக்கு கிடைத்த ஷாக்கிங் கிளவுஸ்
பேருந்து, ரயில்கள் ஆகியவற்றில் கூட்டமாக இருக்கும்போது பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் ஆண்களை சமாளிக்க பெண்கள் ஏற்கனவே பலவழிகளில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் 17 வயது பள்ளி மாணவர் ஒருவர் ஷாக்கிங் கிளவுஸ் ஒன்றை தயாரித்துள்ளார். இந்த கிளவுஸ் சில்மிஷத்தால் அவதியுறும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 17வயது மாணவர் நிரஞ்சன் சுதார். 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர் மின்கருவியை கையாள்வதிலும், புதிது புதிதாக எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் டெல்லியில் நிகழ்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா கொலை சம்பவம் இவரை பெருமளவு பாதித்ததால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு கருவியை பெண்களுக்காக தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
இதன்படி அவரது இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் தயாரானதுதான் ‘ஷாக்கிங் கிளவுஸ்’ வெறும் 150 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த கிளவுஸின் உள்பக்கத்தில் சிம்கார்டு, சி.சி.டி. கேமிரா மற்றும் 3.4 வால்ட் மின்சக்தி கொண்ட பேட்டரி போன்றவை பொருத்தப்பட்டுள்ளது. சில்மிஷத்தில் ஈடுபடும் ஆண்களின் மீது இந்த கிளவுஸ் உதவியினால் அழுத்தினால் இதிலுள்ள 3.4 வால்ட் மின்சாரம் உடனே 240 வால்ட் மின்சார சக்தியாக மாறி சில்மிஷம் செய்தவரை வீழ்த்திவிடும். அதுமட்டுமின்றி சில்மிஷம் செய்தவரை படம் பிடித்தும் விடும். அந்த படத்தை வைத்து காவல்துறையின் புகார் செய்யலாம். வெறும் ரூ.500 மதிப்பில் உருவாகியுள்ள இந்த கிளவுஸ் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
Chennai Today News:Teen develops armour for girls which gives molesters a 220-volt shock