செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு விவசாயம். நாசாவின் புதிய முயற்சி
செவ்வாய்க்கிரகம் குறித்து கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வரும் அமெரிக்காவின் நாசா, அங்கு பொதுமக்களை குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 2030ஆம் ஆண்டு செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவார்கள் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றப்பட்டால் அவர்கள் உணவு ஆதார தேவைக்கு இப்போதே அங்கு காய்கறிகளை பயிரிட நாசா முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கை பயிரிட நாசா நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாசாவின் இந்த முயற்சிக்கு சர்வதேச உருளைக்கிழங்கு மையம் உதவி செய்து வருகிறது. இந்த மையம் செவ்வாய் கிரகத்தில் பயிரிடுவதற்காக 100 விதமான உருளைக் கிழங்கு வகைகள் தேர்வு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த 100 வகை உருளைக்கிழங்குகள் பயிரிடப்படும் என்றும், மேலும் படிப்படியாக மற்ற காய்கறிகளும் பயிரிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள தட்ப வெப்ப நிலையையும் சுற்றுச் சூழலையும் கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தபடி மிகப்பெரிய கூண்டு ஒன்று அமைத்து அதில் காய்கறிகள் சாகுபடி செய்ய நாசா மற்றும் சர்வதேச உருளைக்கிழங்கு மையம் திட்டமிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இதுகுறித்த ஆய்வு தொடங்கப்படும் என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.