ரூ.251க்கு ஸ்மார்ட்போன் கொடுக்கும் நிறுவனத்தில் திடீர் வருமானவரி ரெய்டு
‘பிரீடம் 251’ என்ற பெயரில் ரூ.251க்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதாக ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. உலகிலேயே மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வழங்குவதாக அறிவித்துள்ள இந்த நிறுவனத்தின் நம்பிக்கைத்தன்மை குறித்து பாஜக அமைச்சர் ஒருவர் சந்தேகம் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு நேற்று திடீரென மத்திய உற்பத்திவரி துறை மற்றும் வருமானவரி இலாகா அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர் அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பி. மாநிலத்தில்நொய்டா என்ற பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த நிறுவனம் குறைந்த விலையில் செல்போன்களை தயாரிப்பது ஒன்றை மட்டுமே லட்சியமாக கொண்டு இயங்கி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 3 வகையான ஸ்மார்ட் போன்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றில் 4ஜி வசதி கொண்டு ‘ஸ்மார்ட் 101 செல்போனின் விலை ரூ.2,999 மட்ம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.251க்கு தருவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ள செல்போனை இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai Today News: Income tax raid in Ringing Bell company