மெய்யூர் ஸ்ரீ.சுந்தர்ராஜப் பெருமாள் லக்ஷார்ச்சனை மற்றும் திருக்கல்யாண உற்சவம்.

[carousel ids=”83660,83661,83662,83663,83664″]

அடியோங்கள் சொந்த ஊரான மெய்யூர் ஸ்ரீ.சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீ.சுந்தரவல்லித் தாயாருக்கு , திருக்கல்யாண உற்சவமும், லக்ஷார்சனை வைபவமும் இன்று ( 21.02.2016 ) சிறப்பாக நடந்தது. மேற்படி உற்சவ புகைப்படங்களை இங்கு முக நூலில் பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி.

மேற்படி உற்சவத்தினை சிறப்பாக முன்னின்று நடத்திக் கொடுத்த , நான்கு தலைமுறை கைங்கர்யபரர்களான ஸ்ரீ.அதி.நரசிம்மாசாரியரின் வாரிசுகளான இன்றும் கைங்கர்யங்கள் செய்துவரும் மெய்யூர் ஆதி.ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன் ஸ்வாமி, அவருடைய திருக்குமாரரும், திருவல்லிக்கேணி ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயில் கைங்கர்யபரர் ஸ்ரீ.பாலாஜி என்னும் சௌந்தரராஜன் ஸ்வாமி மற்றும் இவருடைய திருக்குமாரர்.ஸ்ரீ.பார்த்தசசாரதி ஸ்வாமி, மேலும் பாலாஜி ஸ்வாமியின் சகோதரர் ஸ்ரீ.ரங்கராஜன் ஸ்வாமி அவர்களும் மேற்படி உற்சவங்களை முன்னின்று சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.

Leave a Reply