தண்ணீர் பஞ்சம் காரணமாக டெல்லியில் இன்று பள்ளிகள் விடுமுறை
டெல்லியில் ஜாட் இன மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாகவும், இதன்காரணமாக டெல்லி முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
ஜாட் என்ற இனத்தை சேர்ந்த மக்கள் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய வட மாநிலங்களிளில் பெரும்பான்மை இனத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஹரியானாவில் வாழ்ந்து வரும் ஜாட் இன மக்கள் கடந்த சில நாட்களாகவே இடஒதுக்கீடு கேட்டு பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஹரியானாவில் ஆரம்பித்த இந்த போராட்டம் கடந்த 20ஆம் தேதி முதல் பக்கத்து மாநிலமான டெல்லியிலும் பரவியதால் டெல்லியின் முக்கிய நீர் ஆதாரமான முனக் கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளளதாகவும் இதன் காரணமாகடெல்லியில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் இன்று டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், போராட்டத்தின் இன்றைய நிலையை பொறுத்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.