வங்காளதேசத்தில் இந்து கோவில் பூசாரி கல்லால் அடித்து கொலை
இந்தியாவின் அண்டை மாநிலங்களில் ஒன்றாகிய வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் இனமாக இருக்கும் இந்துக்கள் அடிக்கடி தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நேற்று அதிகாலை இந்து கோயில் பூசாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்காள தேசத்தில் சன்னி இன முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டில் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் இந்துக்கள் மீது அடிக்கடி வன்முறை தாக்கதல்கள் நடைபெற்று வரும் நிலையில் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள இந்து கோயிலில் பூஜை செய்து வரும் 50 வயது ஜஜ்னேஸ்வர் ராய் என்ற பூசாரியை நேற்றுஅதிகாலை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த பூசாரியின் மீது சரமாரியாக கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பூசாரி ஜஜ்னேஸ்வர் ராய் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கு தனிப்பட்ட பகை காரணமா? அல்லது இதுவொரு மதரீதியிலான தாக்குதலா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.