பிரதமர் உடையை ஏலம் எடுத்த வைர வியாபாரியின் விநோத அறிவிப்பு.

பிரதமர் உடையை ஏலம் எடுத்த வைர வியாபாரியின் விநோத அறிவிப்பு.

Laljibhai Patelகடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினத்தின்போது சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றபோது அவர் அணிந்திருந்த உடை பெரும் சர்ச்சையை கிளப்பியது. தங்க நிறத்தில் ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்று எழுதப்பட்டிருந்த அந்த உடையின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

ஏழைகளின் தோழன் என்று கூறி பதவிக்கு வந்த மோடி, ஆடம்பரமாக உடை அணிந்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் பிரதமர் அணிந்த அந்த உடையை ரூ.4.31 கோடிக்கு குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் லால்ஜி படேல் ஏலம் எடுத்தார். இவர் ஒரு வைர வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் உடையை ஏலம் எடுத்ததால் அவர் நாடு முழுவதும் பாப்புலரானார்.

இந்நிலையில் நேற்று பிரதமரின் உடையை ஏலம் எடுத்த லால்ஜி படேல் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘நாடு முழுவதிலும் இருந்தும் 10,000 பெண் குழந்தைகளைத் தேர்வு செய்து அவர்களின் கல்விக்காக தலா ரூ.2 லட்சம் நிதி அளிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக நான் ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளேன். இந்த நிதியுதவி வழங்கும் விழா மார்ச் மாதம் 13-ம் தேதி சூரத்தில் நடைபெறம். பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடம் அளிக்கப்படவுள்ள இந்த 2 லட்சமானது அந்த குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணச் செலவிற்கு பயன்படும் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் மீண்டும் அவர் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

Chennai Today News:Man who bought Modi’s suit, to donate Rs 200 cr for 10,000 girls

Leave a Reply