இன்னும் திருந்தலையா விஜயகாந்த்? தஞ்சையில் தொண்டர்களை அடிக்க முயற்சித்ததால் பரபரப்பு

இன்னும் திருந்தலையா விஜயகாந்த்? தஞ்சையில் தொண்டர்களை அடிக்க முயற்சித்ததால் பரபரப்பு
vijayakanth
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராக தஞ்சை நீதிமன்றத்திற்கு இன்று வந்த விஜயகாந்த் தன்னை நெருங்கிய கட்சி தொண்டர்களை அடிக்கப் பாய்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் கடந்த மாதம் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தின் போது, முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிய சம்பவம் குறித்து விஜயகாந்த் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவிருந்ததை அடுத்து விஜயகாந்த் நேரில் ஆஜராக தஞ்சை நீதிமன்றம் வந்தார்.

விஜயகாந்த் வருகையால் தேமுதிக தொண்டர்கள் உள்பட நீதிமன்ற வளாகத்தில் பெரும்கூட்டம் கூடியிருந்தது. விஜயகாந்த் காரில் இருந்து இறங்கியதும் அவரை நெருங்கி அவருக்கு கைகொடுக்க தொண்டர்கள் முயற்சி செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் தன்னை நெருங்கிய ஒரு தொண்டரை அடிக்க கை ஓங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சியின் முக்கியத் தலைவர்களால் விஜயகாந்தின் அடியில் இருந்து தொண்டர்கள் தப்பினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே வேட்பாளர் உள்பட கட்சியின் தொண்டர்களை விஜயகாந்த் பலமுறை அடித்துள்ளதால் தேர்தல் நேரத்திலும் அவர் திருந்தவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து விமர்சனம் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Leave a Reply