பிச்சைக்காரனுக்கு கிடைத்த வரிவிலக்கு
நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் என மூன்று ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நான்காவதாக நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. இந்த படத்திற்கு சமீபத்தில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையும் கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
மார்ச் 4 முதல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தை ‘பூ’, ரோஜாக்கூட்டம்’ டிஷ்ஷூம் உள்பட பல படங்களை இயக்கிய சசி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, சாத்னா டைட்டஸ், பகவதிபெருமாள் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்ததோடு தயாரிக்கவும் செய்துள்ளார் . இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி இந்த படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக ரசிகர்கள் உணரும் வகையில் எடுக்கப்பட்டதாகவும், தன்னுடைய மற்ற மூன்று படங்களை போல இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
Chennai Today News: Pichaikaran gets tax exemption & releasing in 500+ screen across the world from March 4th