14 முறை கத்தியால் குத்தப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தை உயிருடன் திரும்பிய அதிசயம்
தாய்லாந்து நாட்டின் 14 முறை கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் குழியில் புதைக்கப்பட்ட பச்சிளங்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இந்த அதிசய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் உள்ள Khon Kaen என்ற மாகாணத்தில் ஒரு பெண் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே சத்தம் வந்த திசையை நோக்கி சென்ற அந்த பெண், ஒரு குழி இலைகளால் மூடப்பட்டிருந்தது தெரிந்தது. உடனே அந்த இலைகளை அகற்றி பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை உயிருக்கு போராடியவாறு இருந்ததை பார்த்தார்.
உடனே அந்த குழந்தை மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை தற்போது தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து தாய்லாந்து போலீசார் தீவிர விசாரணை செய்து குழந்தையை கத்தியால் குத்தி குழியில் வீசியவர்களை தேடி வருகின்றனர்.