மாணவிகளிடம் கண்ணியமாக நடக்கும் மாணவர்களுக்கு பரிசு. மேனகா காந்தி
மாணவ பருவத்திலேயே மாணவர்கள் ஒழுக்கங்களை கற்றுக்கொள்ளும் வேண்டும் என்றும் சக மாணவிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு கண்ணியமாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு பரிசு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள சூரஜ்குந்த் மானவ் ரச்னா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான தற்காப்பு நடவடிக்கைகள், விழப்புணர்வு யோசனைகள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் மேனகா காந்தி பேசியதாவது:
பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ளும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு கண்ணியமாக நடக்கும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மேலும் ஆபத்தான நேரங்களில் போலீசாரின் உதவியை நாடும் வகையில் பெண்கள் பயன்படுத்தும் செல்போனில் அவசர கால பட்டனை இணைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு மேனகா காந்தி கூறினார்