அஜித் நாயகிக்கு விரைவில் திருமணம்

அஜித் நாயகிக்கு விரைவில் திருமணம்

அஜித் நடித்த ‘அசல்’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நடிகை பாவனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கன்னட தயாரிப்பாளர் ஒருவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வரும் நடிகை பாவனா, விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும், தனது திருமணம் குறித்த தகவல்களை பத்திரிகையாளர்களிடம் கூடிய விரைவில் தெரிவிக்க உள்ளதாகவும் பாவனா கூறியுள்ளார்.

இதுகுறித்து பாவனா கூறியதாவது: நானும் கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். கடந்த 2014ஆம் ஆண்டே நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் தொடர் படப்பிடிப்பு காரணமாக அப்போது திருமணம் செய்ய முடிய வில்லை.

எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்ய உறுதியாக உள்ளோம். இந்த வருடம் கண்டிப்பாக எங்கள் திருமணம் நடைபெறும். எனது காதலன் பெயர் மற்றும் விவரங்களை இப்போது வெளியிட விரும்பவில்லை. அதற்கான காலம் வரும் போது அனைவருக்கும் அவரை பற்றிய விவரங்களை தெரிவிப்பேன்’ என்று கூறினார்.

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில்தான் பாவனா அறிமுகமானார். அதன் பின்னர் வெயில், தீபாவளி, ஜெயம்கொண்டான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply