கிங் பிஷரை அடுத்து யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தையும் இழந்த விஜய்மல்லையா
விஜய்மல்லையா ஒரு காலத்தில் இந்தியாவின் அசைக்க முடியாத தொழிலதிபரக இருந்து வந்தார். அவரிடம் நெருங்கி பழகவும், இணைந்து பயணம் செய்யவும் மத்திய அமைச்சர்களே விரும்பியதுண்டு.
இந்நிலையில் அவர் நடத்தி வந்த கிங்பிஷர் நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்தது. ஊழியர்களுக்கு சம்பளம் கூட தரமுடியாத நிலையில் அந்த நிறுவனத்தின் லைசென்ஸும் ரத்தானதால் இழுத்து மூடப்பட்டது.
இந்நிலையில் விஜய் மல்லையாவின் தந்தை ஆர்மபித்த யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கடன் கொடுத்த வங்கிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக விற்கத்தொடங்கினார் விஜய் மல்லையா. டியாஜியோ என்ற நிறுவனம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. விஜய் மல்லையாவிடம் வெறும் 3.99 சதவீத பங்குகள் மட்டுமே இருந்த நிலையில் டியாஜியோ கொடுத்த நெருக்கடியால் தற்போது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் குழுமத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார். இருப்பினும் அவருடைய மகன் சித்தார்த் இயக்குனர் குழுவில் இரண்டு ஆண்டுகள் நீடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராகிய விஜய் மல்லையா தவறான நிர்வாகத்திறனால் தன்னுடைய பெரும்பாலான சொத்துக்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.