ஆஞ்சியோகிராம் வசதியுள்ள மருத்துவமனையில் உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாயின் தன்மை, அடைப்புகளின் அளவு ஆகியவற்றை 30 நிமிஷங்களில் கண்டறிந்து விடலாம். அடைப்பின் தன்மை, அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடம், பாதித்த ரத்த குழாய் ஆகியவற்றுக்கு ஏற்ப, ஆஞ்சிபோபிளாஸ்ட்டி செய்து அடைப்பை அகற்றி ஸ்டென்ட் பொருத்தலாம்.
அடைப்பின் அளவு அதிகமாக இருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி, அவசர பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். ஏனெனில் அடைப்பை அகற்றினால்தான் நோயாளியைக் காப்பாற்ற முடியும்.