ஆசியா கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு கிடைத்த முதல் வெற்றி.
ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது வங்கதேசத்தில் நடந்து வருகிறது. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் நேற்று ஐக்கிய அரபு எமிரேட் அணியுடன் மோதி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
இதனால் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷோஹைப் மாலிக் 63 ரன்களும், உமர் அக்மல் 50 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. முன்னதாக இந்தியாவும் வங்கதேசமும் தலா நான்கு புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.