‘தெறி’க்காக சொந்தக்குரலில் டப்பிங் செய்த மீனா மகள்
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் விஜய், சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர்களின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது விஜய்யின் மகளாக நடித்த மீனா மகள் நைனிகாவின் டப்பிங் பணிகளும் தற்போது முடிவடைந்துவிட்டது. ஏற்கனவே இந்த படத்தின் ஒருசில காட்சிகளில் நடித்த விஜய் மகள் திவ்யாவின் டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துணை நடிகர்களின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டது.
மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மற்றும் விஜய் மகள் திவ்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் அவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.