விஜயகாந்துக்காக காத்திருக்கின்றாரா ஜெயலலிதா?
விஜயகாந்த் எந்த அணியில் கூட்டணி சேருவார் என்று அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதாவும் விஜயகாந்தின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் காத்திருப்பது தன்னுடைய கூட்டணியில் விஜயகாந்த் வரவேண்டும் என்பதற்காக இல்லை. விஜய்காந்த் எந்த கூட்டணியில் சேருகிறார் என்பதை பொறுத்து அடுத்தகட்ட காயை நகர்த்தத்தான் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றது.
விஜய்காந்த், பாஜக கூட்டணியில் அல்லது மக்கள் நலக்கூட்டணீயில் இணைந்தால் தனித்து நிற்கலாம் என்றும், ஒருவேளை திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தால் பாஜகவை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் ஜெயலலிதா இருப்பதாக கூறப்படுகிறது.
விஜயகாந்தின் பேரம் மிக அதிகமாக இருப்பதால் திமுக, தேமுதிகவை இணைத்து கொள்ள தயங்குகிறது. 70 சீட்டுக்கள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி தேர்தலில் 50% இடம் என விஜய்காந்தின் டிமாண்ட் பெரிய அளவில் இருக்கின்றது. இந்த நிபந்தனைகளுக்கு திமுக ஒப்புக்கொண்டால் அதிமுகவுக்கு அடுத்த இடத்திற்கு தேமுதிகவை கொண்டு போய் சேர்த்த புண்ணியம் திமுகவுக்கு கிடைத்துவிடும். எனவே அரசியல் சாணக்கியரான கருணாநிதி, இந்த தேர்தலில் திமுக கூட்டணி தோற்றாலும் பரவாயில்லை, விஜயகாந்தை வளர்த்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே விஜயகாந்த் தனது டிமாண்ட்டை குறைத்து கொண்டால் மட்டுமே திமுக கூட்டணியில் இடம்பெற முடியும் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.