ஆசியா கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

ஆசியா கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

cricket1ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே  இந்திய அணி இரண்டு வெற்றிகளை பெற்று நான்கு புள்ளிகள் என்ற நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் யுவராஜ்சிங் 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டிரிகள் அடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

Leave a Reply