திருநங்கையுடன் காஷ்மீருக்கு செல்கிறார் நயன்தாரா

திருநங்கையுடன் காஷ்மீருக்கு செல்கிறார் நயன்தாரா

irumugamகோலிவுட் திரையுலகில் தான் நடிக்கும் கதாபாத்திரமாக மாறிவிடும் திறமை மிக்க நடிகர்களில் ஒருவராகிய விக்ரம், தற்போது ‘இருமுகன்’ படத்தில் ரகசிய ஏஜண்ட் மற்றும் திருநங்கை ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு முதல்முறையாக நயன்தாரா ஜோடி சேருகிறார். மேலும் ‘ஓகே கண்மணி’ நித்யாமேனன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் சென்னை மற்றும் மலேசிய படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக விக்ரம், நயன்தாரா உள்பட படக்குழுவினர் அனைவரும் காஷ்மீர் செல்லவுள்ளனர். காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், மீதி படப்பிடிப்பை இன்னும் சுமார் இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘அரிமாநம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். விக்ரமின் ‘இருமுகன்’ திரைப்படமும் தனுஷின் ‘கொடி’ திரைப்படமும் வரும் ரம்ஜான் திருநாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply