வடகொரியா மீது புதிய பொருளாதார தடை. ஐ.நா ஒப்புதல்

வடகொரியா மீது புதிய பொருளாதார தடை. ஐ.நா ஒப்புதல்

north koreaகடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அபாயகரமான ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை செய்த வடகொரியா நாட்டின் மீது மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் வடகொரியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் அச்சுறுத்தும் நாடாக விளங்கி வரும் வடகொரியா அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் போன்ற பரிசோதனைகளை அவ்வப்போது செய்து அண்டை நாடான தென்கொரியாவை மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் வடகொரியாவுக்கு பாடம் புகட்ட அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய முக்கிய நாடுகள் முடிவு செய்தது.  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் நடந்து வருவதால் அந்த நாட்டின் மீது ஏற்கனவே சில தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் உலகப்போரின்போது ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டை விட 25 ஆயிரம் மடங்கு அதிக சக்தி கொண்ட ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதனை செய்ததோடு, தொலைதூர ஏவுகணை பரிசோதனை ஒன்றையும் நடத்தியது. மேலும் அமெரிக்காவுக்கு நேரடியாக அச்சுறுத்தல் கொடுத்து வந்த வடகொரியா மீது புதிய பொருளாதார தடையை அமெரிக்கா, விதித்தது.

ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு, தொலைதூர ஏவுகணை சோதனை தொடர்பாக வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று நடைபெற்ற ஓட்டெடுப்பில் பெரும்பான்மை கிடைத்துள்ளதால் வடகொரியா மீதான பொருளாதார தடை உறுதியாகியுள்ளது.

Leave a Reply