கருப்பு பணத்தை வெள்ளையாக்க பிரதமரே உதவியாக இருப்பதா? ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று முன் தினம் தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில், ‘உள்நாட்டில் கருப்புப் பணத்தை ரொக்கமாகவும், சொத்துக்களாகவும் வைத்திருப்பவர்கள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான நான்கு மாதங்களுக்குள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க அவகாசம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார்.
நேற்று ஜனாதியின் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய ராகுல்காந்து, ‘வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்புப்பணத்தை இந்தியாவுக்கே கொண்டு வருவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமர்ந்த மோடி தற்போது உள்நாட்டில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு அவகாசம் கொடுத்திருக்கும் திட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதிலிருந்தே தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பிரதமர் மோடி தவறிவிட்டார் என்பது உறுதியாகிறது என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் ராகுல்காந்தி தனது உரையில் ஜே.என்.யூ மாணவர் கண்ணய்யாவின் பேச்சை தான் முழுமையாக வீடியோவில் பார்த்ததாகவும், அதில் ஒரு வார்த்தை கூட தேச விரோதம் இல்லை என்றும் ஜேஎன்யு மாணவர்களை மத்திய அரசு நெருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
Chennai Today News: Centre brought a ‘fair and lovely’ scheme to launder black money: Rahul