சி.வி.குமாரின் மாயவன் படத்தில் அஜித் பட நடிகை
பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சி.வி.குமார், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். திகில் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் சந்தீப் கிஷான், லாவன்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் ஒரு நடித்த அக்ஷரா கவுடா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் அக்ஷராவுக்கு கோலிவுட் திரையுலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்து வரும் இந்த படத்திற்கு கமல்ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கின்றார். இந்த படத்தின் திரைக்கதையை நலன்குமாரசாமி எழுதுகிறார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில், லியோ ஜான்பால் படத்தொகுப்பில் இந்த படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.