‘தெறி’ படத்தில் டி.ஆரின் குத்துப்பாட்டு
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ படத்தின் ஆடியோ விழாவில் தன்னுடைய அடுக்குமொழி பாணியில் பேசி பட்டையை கிளப்பிய டி.ராஜேந்தர் தற்போது தெறி’ படத்திலும் வருகிறாராம். ஆனால் புலி படம் போல ஆடியோ விழாவில் பேசாமல் ‘தெறி’ படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளாராம்.
அட்டகாசமான குத்துப்பாடலாக அமைந்துள்ள இந்த பாடலின் டியூனை குறுகிய காலத்தில் கம்போஸ் செய்து மூன்றே மணி நேரத்தில் டி.ஆரை வைத்து ஒலிப்பதிவு செய்து முடித்துவிட்டாராம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
இந்த பாடல் விஜய்க்காக பாடப்பட்டதா? அல்லது டைட்டில் பாடலாக வருமா? என்பது குறித்து கூற இயக்குனர் அட்லி மறுத்துவிட்டார். ஆனால் படத்தில் இந்த பாடல் மிக முக்கியமான இடத்தில் உபயோகப்படுத்தப்படும் என்பதை மட்டும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் ‘தெறி’ படத்தின் பாடல் வெளியீடு வரும் 20ஆம் தேதி சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆடியோ விழாவிற்கு டி.ராஜேந்தர் வருவார் என கூறப்படுகிறது.