ஜெயலலிதாவுக்கே ஷாக் கொடுத்த ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கே ஷாக் கொடுத்த ஓ.பன்னீர்செல்வம்
OPS long
அதிமுகவின் உண்மையான விசுவாசியாகவும் ஜெயலலிதாவின் குட்புக்கில் முதலிடத்தில் இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் என்ற ஓபிஎஸ், தற்போது ஜெயலலிதாவின் விசுவாசி லிஸ்ட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக இரண்டு முறை பதவியில் இருந்து ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு பின்னர் கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் பலரை நிறுத்த முயற்சி செய்ததாகவும், இதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட முதல்வர், அவருக்கே செக் வைக்கும் வகையில் அவருக்கு நெருக்கமான அமைச்சர்களின் பதவிகளை பறித்து கொண்டு வருவதாகவும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் இந்த செய்திகள் இணையத்தில் அதிகளவு உலாவுவதால் கூகுள் டிரெண்டில் ஓபிஎஸ் ஜெயலலிதாவையே பின்னுக்கு தள்ளி ஷாக் கொடுத்துள்ளார். #OPS4CM என்ற ஹேஷ்டேக் இரண்டு நாட்களாக சென்னை டிரெண்டில் இருந்து வருகிறது. ஜெயலலிதாவை இணையத்தில் தேடியவர்களை விட ஓபிஎஸை இருமடங்கு தேடியுள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இணையத்தில் பெற்ற செல்வாக்கை ஓபிஎஸ் கட்சியிலும் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply