தேர்தல் அறிவிப்புக்கு முன் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையா? பரபரப்பு தகவல்

தேர்தல் அறிவிப்புக்கு முன் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையா? பரபரப்பு தகவல்
rajiv gandhi
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்ஹ்டு வரும் நளினி உள்பட 7 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறும் தமிழக அரசின் தலைமைசெயலாளர் சமீபத்தில் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்திற்கு இன்னும் எவ்வித பதிலும் வராததை அடுத்து தமிழக அரசே இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இன்று காலை தமிழக அரசிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவரிடம் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த சம்பிரதாய நடவடிக்கைகளுக்காக வேலூர் சிறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ஏழுபேர் விடுதலை குறித்த முடிவை எடுக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இந்த நடவடிக்கையால் ஆளுங்கட்சியின் செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply