நியூசிலாந்து நாட்டின் தேசிய கொடி மாற்றமா? பொதுவாக்கெடுப்பின் முடிவு என்ன?
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து நியூசிலாந்து நாடு விடுதலை அடைந்தது முதல் அந்நாட்டின் தேசிய கொடியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில் தேசியக் கொடியில் மாற்றம் கொண்டு வரலாமா, வேண்டாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வாக்கெடுப்பு நியூசிலாந்து நாட்டில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் நியூஸிலாந்து இருந்ததை நினைவுபடுத்தும் வகையில் அந்த நாட்டு தேசியக் கொடியில் “யூனியன் ஜாக்’ என்ற சின்னம் இடம் பெற்றிந்தது. இந்த சின்னத்திற்கு நியூசிலாந்து நாட்டின் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தேசியக் கொடியிலிருந்து “யூனியன் ஜாக்’ சின்னத்தை நீக்கிவிட்டு, கருப்பு மற்றும் நீல நிறப் பின்னணியில், வெள்ளி நிற பரணி இலையும், தற்போதைய தேசியக் கொடியில் உள்ள நான்கு நட்சத்திரங்களும் இடம் பெறும் புதிய தேசியக் கொடியை உருவாக்கும் யோசனை அரசுக்கு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், தேசியக் கொடியில் மாற்றம் கொண்டு வரலாமா, வேண்டாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் நாட்டின் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த முடிவு விரைவில் அறிவிக்கபப்டவிருக்கும் நிலையில் பெரும்பான்மையானவர்கள் விருப்பம் தெரிவித்தால், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள கொடி, நியூஸிலாந்தின் தேசியக் கொடியாக அறிவிக்கப்படும்.
இதனிடையே இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 63 சதவீதம் பேர் தற்போதுள்ள தேசியக் கொடியே தொடரலாம் எனவும், 26 சதவீதத்தினர் மட்டுமே தேசியக் கொடியில் மாற்றம் வேண்டும் என்றும் கூறப்படுகிறது.