தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

electionதமிழகம் உள்பட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்புகளை மிக ஆவலுடன் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார். இதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்பது மே 19ஆம் தேதி தெரிந்துவிடும்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி:

வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை
வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 30-ம் தேதி   
வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் மே 2-ம் தேதி
வாக்குப்பதிவு தேதி – மே 16 ஆம் தேதி
வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதி  

அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்|றும் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 6 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி மற்றும் ஏப்ரல் 11ம் தேதி. ஏப்ரல் 17ம் தேதி ஏப்ரல் 21ம் தேதி, ஏப்ரல் 25ம் தேதி, மே 5ம் தேதி என ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்

கேரளா

கேரளா சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறும்.  வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி முடிவடையும். ஏப்ரல் 30-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மே 2-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறும் கடைசி நாள். மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

“தமிழகத்தில் 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 65,616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி முன்புவரை போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம் பெற்றிருப்பது கட்டாயம். 5 நாட்களுக்கு முன்பே புகைப்பட வாக்காளர் அடையாள சீட்டு விநியோகிக்கப்படும். வாக்காளர் அடையாள சீட்டு விநியோகத்தை மத்திய பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.

தரைத்தளத்திலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்து மகளிர் வாக்குச்சாவடி அமைக்கப்படும்.

‘நோட்டா’வுக்கு தனி சின்னம்

‘நோட்டா’வுக்கு தனி சின்னம் வழங்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். பணப்பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் உடன் நடமாடும், பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது” இவ்வாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி கூறியுள்ளார்.

Leave a Reply