நாக்கை அறுத்தால் 5 லட்சம், தலையை வெட்டினால் 11 லட்சம். கண்ணையாகுமாருக்கு விலை பேசும் மர்ம நபர்கள்
புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையாகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்த அவரை கொலை செய்பவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு அளிக்கப்படும் என டெல்லியில் நேற்று மர்ம நபர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கன்னையாகுமாருக்கு எதிராக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக விசுவாசுகள்தான் இந்த போஸ்டரை ஒட்டியிருக்க் வேண்டும் என கருதப்படுகிறாது.
டெல்லி பிரஸ் கிளப் பகுதியில் இந்த போஸ்டர்கள் மிக அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் செல்வாக்காக உள்ள சங்பரிவார் அமைப்பின் ஆதரவாளர்கள் இந்த போஸ்டரை ஒட்டியிருக்கலாம் என்றும் கருத்துக்கள் கூறப்படுகிறது.
ஏற்கனவே கண்ணையாகுமாரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தருவதாக உ.பி மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் குல்தீப் வர்ஷன் அறிவித்திருந்த நிலையில் தற்போது கொலை செய்பவர்களுக்கு ரூ.11 லட்சம் தருவதாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணையாகுமாருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.