அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து கருப்பின தலைவர் திடீர் விலகல்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளதால் அடுத்த அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பரில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பதவிக்காக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியில் இருந்து போட்டியிட ஒருசில தலைவர்கள் முயற்சி எடுத்து வரும் நிலையில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட முடிவு செய்திருந்த பென் கார்ஸன் என்பவர் திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பென் கார்ஸனுக்கு கட்சியிலும், மக்களிடத்திலும் போதிய ஆதரவு இல்லாததால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடவிருந்த ஒரே கருப்பினத்தை சேர்ந்தவரும் போட்டியில் இருந்து விலகியதால் அடுத்த அமெரிக்க அதிபர் கருப்பினத்தை சேர்ந்தவர் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஹிலாரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்ப் அவர்களும்தான் நேருக்கு நேர் மோத அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளது.