சுலோவாகியா பொதுத்தேர்தல். மீண்டும் பிரதமர் ஆகிறார் ராபர்ட் பிகோ
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் சுலோவாகியா என்ற நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ராபர்ட் தலைமையிலான இடது சாரி கட்சியான ஸ்மெர் எ சமூக ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைக்காததால், அந்த கட்சி சிறிய கட்சிகளின் உதவிகளை நாடியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரீஸ் மற்றும் இத்தாலி நாடுகளின் வழியாக வரும் அகதிகளை பிரதமர் ராபர்ட் பிகோ ஏற்றுக்கொள்ளாததால் அவர் மீது பொதுமக்க்ள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நாட்டில் போதிய பொருளாதார வளர்ச்சி இல்லை என்று ஒருசாரார் பிரதமர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் நர்ஸ்கள் சம்பள உயர்வு கேட்டு இன்னொரு பக்கம் போராட்டம் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக அவருக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டாலும், பல மக்கள் நலத்திட்டங்களை செயபடுத்தியுள்ளதாலும், சமீபத்தில் மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச ரயில் பயண அறிவிப்பை வெளியிட்டதாலும் அவருடைய கட்சி தனிப்பெரும் கட்சியாக இந்த் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
சிறிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மீண்டும் பிரதமராக ராபர்ட் பிகோ பதவியேற்பார் என கூறப்படுகிறது.