கண்ணையாவை அடுத்து சர்ச்சையில் சிக்கும் அலகாபாத் பல்கலை மாணவர் தலைவர்
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை அடுத்து அலகாபாத் பல்கலைக்கழக மாணவர் தலைவரான ரிச்சாசிங் என்ற பெண்ணுக்கு நெருக்கடி வலுத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவரை மாணவர் தலைவர் பதவியில் இருந்து விலகும்படி ரகசியமாக வலியுறுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அலகாபாத் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அலகாபாத் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 128 ஆண்டு காலம் ஆகியபோதிலும் தற்போதுதான் முதல்முறையாக பெண் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருவதாக.ஐக்கிய ஜனதா தளக் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் கே.சி.தியாகி என்பவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்றுமொரு ‘காவிமயமாக்க’முயற்சி இதுவாகும். நாங்கள் இதனை கடுமையாக கண்டிக்கிறோம், மற்ற கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பவிருக்கிறோம்.
சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ள ரிச்சா சிங்கை ரோஹித் வெமுலா, கண்ணய்யா குமார், ஆகியோருக்கு அடுத்தபடியாக பல்கலைக்கழக நிர்வாகிகள் குறிவைக்கின்றனர். ஆனால் நாங்கள் இதனை அனுமதிக்கப் போவதில்லை. அதாவது ரிச்சா சிங் தானே தலைமைப் பதவியை விட்டு விலகிவிடுமாறு துன்புறுத்தப்படுகிறார். அவர் விலகிவிட்டால் பெரும் போராட்டம் நடைபெறும்.
பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வளர்ச்சி குறித்து பேசும் பிரதமர் மோடி மறுபுறம் ரிச்சா சிங் பல்கலை. வளாகத்தில் அனுபவிக்கும் அவமானங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கையும் செயலும் முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது”
Chennai Today News: After Rohith and JNU, we are ABVP’s next target: Allahabad University student leader