தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி. ராஜேஷ் லக்கானி

தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி. ராஜேஷ் லக்கானி

rajeshதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக கடந்த சனிக்கிழமை அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. இதன்படி தமிழக அரசு எந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட முடியாது. அதேபோல் அரசு விழாக்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் அறிவிப்புக்கு அனுமதி கிடையாது. இந்நிலையில் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபோதிலும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சட்டசபை தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் புதிதாக ஒப்பந்த புள்ளி கோருவதற்கு கட்டுப்பாடு உள்ளது. ஆனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று புதிய டெண்டர்கள் விடலாம். தினசரி பணிகளுக்கு சந்தேகம் இருந்தால் துறை தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்.

தேர்தல் விதி மீறல் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பறக்கும் படையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் விழிப்புணர்வு பிரசாரங்களும் ஆங்காங்கே நடைபெற்ற வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply