ஃபேஸ்புக்கின் முக்கிய குறையை கண்டுபிடித்த பெங்களூர் இளைஞருக்கு ரூ.10 லட்சம் பரிசு
உலகின் நம்பர் ஒன் சமூக இணையதளமாக விளங்கி வரும் ஃபேஸ்புக்கில் முக்கிய குறைபாடு ஒன்றை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய பெங்களூரை சேர்ந்த ஒருவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.10 லட்சம் கொடுத்து கெளரவித்துள்ளது
Flipcart என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆனந்த் பிரகாஷ் என்ற பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒரு ஹேக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக்கை லாக் இன் செய்யும்போது ஏற்படும் முக்கிய குறையை இவர் கண்டுபிடித்துள்ளார். இவர் கண்டுபிடித்த குறையை பயன்படுத்தி இதுவரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட வாய்ப்பு இருப்பதாகவும் இந்த குறையை சரிசெய்தால் ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்
ஆனந்த் பிரகாஷ் கொடுத்த தகவலையடுத்து பேஸ்புக்கில் இருந்த குறையை தற்போது அந்நிறுவனம் சரி செய்துள்ளது. மேலும் பேஸ்புக் குறையை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ்க்கு 15000 அமெரிக்க டாலர் பரிசாக அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.