டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
20 ஓவர்கள் உலகக்கோப்பை போட்டி நேற்று தொடங்கியது. முதல் ஆட்டம் நாக்பூர் நகரில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்களை இழந்து 170 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டகாரரும் விக்கெட் கீப்பருமான முகமது ஷெசாத் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான அஸ்கர் 55 ரன்கள் எடுத்தார்.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்களான ஜார்ஜ் முன்ஷெ 40ரன்களும் கைல் கோட்செர் 41 ரன்களும் அதிரடியாக எடுத்தபோதிலுக் அவர்களுக்கு பின்னர் களமிறங்கிய வீரர்கள் பொறுப்பின்றி ஆடியதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷெசாத் தேர்வு செய்யப்பட்டார்.
ஹாங்காங் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்க்கு இடையே நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜிம்பாவே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது