சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ டைட்டிலுக்கு புதிய விளக்கம்.

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ டைட்டிலுக்கு புதிய விளக்கம்.
siva-karthikeyan
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான ‘ரஜினிமுருகன்’ சூப்பர் ஹிட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ‘ரெமோ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நான்கு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நான்கு கேரக்டர்களின் முதல் எழுத்துக்களின் தொகுப்பே இந்த படத்தின் டைட்டிலான ‘ரெமோ’ என்ற புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது R-E-M-O என்ற நான்கு எழுத்துக்களில் அவருடைய நான்கு கேரக்டர்களின் பெயர்கள் தொடங்குவதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நண்பராகவும் இந்த படத்தின் காமெடி நடிகராகவும் சதீஷ் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பால்ய நண்பர் ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

Chennai Today News: The detail about Sivakarthikeyan’s Remo title

Leave a Reply