11 வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

11 வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
china child 1
சீனாவில் உள்ள ஹங்ஷூ என்ற நகரை சேர்ந்த ஐந்து வயது குழந்தை ஒன்று 11வது மாடியில் இருந்து கீழே விழுந்தும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய அதிசய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

லியுலியூ என்ற ஐந்து வயது குழந்தை தனது பெற்றோர்களுடன் 11வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலில் இருந்து எட்டி பார்த்தபோது எதிர்பாராத விதத்தில் கீழே விழுந்தது. ஆனால் ஒன்பதாவது மாடியில் உள்ள பால்கனியில் உள்ள செக்யூரிட்டில் பந்தலில் விழுந்த அந்த குழந்தை பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள மரத்தின் மீது விழுந்து பின்னர் புல்தரையில் விழுந்தது.

கீழே விழுந்த குழந்தை அழுது கொண்டே எழுந்து நின்றதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். உடனடியாக அந்த குழந்தையின் பெற்றோர் அருகில் இருந்து மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது எவ்வித எலும்பு முறிவும் இன்றி சிறு காயங்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இந்த ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

china childLucky escape: Miracle as 4-year-old girl survives fall from 11TH floor

Leave a Reply