விக்ரம் நடிக்கும் முதல் பேய்ப்படம்
’10 எண்றதுக்குள்ள’ படத்தை அடுத்து அரிமா நம்பி’ ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் தற்போது ‘இருமுகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா மற்றும் நித்யாமேனன் நாயகிகளாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மலேசியா ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லடாக் மற்றும் பாங்காக் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் விக்ரம் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அஜய்ஞானமுத்து ஏற்கனவே அருள்நிதி நடித்த டிமாண்ட்டி காலனி’ என்ற பேய்ப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம்-அஜய்ஞானமுத்து இணையும் இந்த படமும் ஒரு திகில் கலந்த பேய்ப்படம் என்றும் விக்ரம் நடிக்கும் முதல் பேய்ப்படம் என்றும் கூறப்படுகிறது. ‘இருமுகன்’ படத்தை அடுத்து ‘திரு இயக்கத்தில் உருவாகும் ‘கருடா’ படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும், அதனையடுத்து அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.