விஜய்யுடன் இரண்டாவது முறையாக மோதும் சிம்பு?

விஜய்யுடன் இரண்டாவது முறையாக மோதும் சிம்பு?
vijay and simbu
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கம்போல் இம்முறையும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு பெண்டிங் உள்ள நிலையில் அந்த பாடலை முடிக்க பாண்டியராஜ் மறுப்பு தெரிவித்ததால் ரிலீஸ் தேதி தள்ளி போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பாடலை டி.ராஜேந்தரே இயக்கவுள்ளதாகவும், அதன்பின்னர் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்யவும் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் திட்டமிட்டுள்ளாராம்.

ஏற்கனவே விஜய்யின் ‘தெறி’ தமிழ்ப்புத்தாண்டில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவருடன் மோத சிம்பு தயாராகிவிட்டதாகவே கூறப்படுகிறது. இதற்கு முன்னர் விஜய்யின் ‘துப்பாக்கி’ ரிலீஸ் தினத்தில்தான் சிம்புவின் ‘போடா போடி’ ரிலீஸ் ஆகி படுதோல்வி அடைந்தது. தற்போது இரண்டாவது முறையாக விஜய்யுடன் மோதி சிம்பு தோல்வி அடைவாரா? அல்லது வீறுகொண்டு எழுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply