மம்தா பானர்ஜியை தோற்கடிக்க களமிறங்கும் நேதாஜியின் பேரன்
தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று மேற்குவங்காளம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணியாக இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் மம்தா பானர்ஜியை எப்படியாவது இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்கு எதிராக நேதாஜியின் பேரனை களத்தில் இறக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பவானிபூர் தொகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் பேரன் சந்திரகுமார் போஸ் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படுகிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். இவரை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் ஆதரிப்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சந்திரகுமார் போஸ் கூறுகையில், கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் மாற்றத்தை எதிர்பார்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பை அக்கட்சி நிறைவேற்றவில்லை. பா.ஜ.க.வால் மட்டுமே மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.