பாம்பாட்டி சித்தர் முதன்மை சித்தர்கள் 18 பேரில் ஒருவராவார் .பாம்பாட்டி சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும். கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
மருதமலையிலேயே வாழ்ந்தவர். காடு, மலை -வனாந்திரங்களை வாசஸ்தலமாக கொண்டு சுற்றித்திரிந்தவர். ஒருநாள் வனாந்திரத்தில் அலைந்து கொண்டிருந்தபோது சட்டைமுனி என்னும் சித்தர் அங்கு வந்து அவரால் அறிவு நிலை புகட்டப்பெற்றவர்.
பாம்பாட்டி சித்தர் இளமைக்காலத்தில் பாம்பு பிடிப்பது, விஷமெடுப்பது, என பல காடுகளில் திரிந்து தமது வாழ்வாதாரத்தை ஓட்டிக்கொண்டிருக்க ஒரு முறை மருதமலை அடிவாரம் வந்த போது பாம்பாட்டி சித்தர் பற்றி அறிந்தவர்கள் மலை மேலே நவரத்தினம் மாணிக்க கல் உடைய நாகசர்ப்பம் உள்ளது எனவும் , இந்த பாம்பை பிடித்தால் கோடிஸ்வரனாகி விடலாம் என ஆசைகூற பாம்பாட்டி சித்தருக்கும் ஆசை ஏற்பட மருதமலே ஏறி மாணிக்கல் உடைய பாம்பை தேடினார். இரவு நிசியில் அடந்த காட்டில் பாம்புக்காக காத்திருந்த பாம்பாட்டி சித்தருக்கு திடிரென வெளிச்சத்துடன் தெய்வீக வாசனையுடன் ஒருவர் நிற்க..! ஐயா தாங்கள் யார் என வேண்ட? பாம்பாட்டியாரே நான் சட்டை முனி சித்தர் தாங்கள் இந்த காட்டில் இருட்டில் எதை தேடுகிறீர்கள் எனக்கேட்க !அதற்கு பாம்பாட்டியாரோ ஐயா நான் நவரத்தின மாணிக்ககல் உடைய பாம்பை தேடி வந்தேன் எனக்கூற சட்டை முனி சித்தர் சிரித்தார் . ” அதை விடவிலைமதிப்புடைய பாம்பு குண்டலினி சக்தி என்ற பெயரில் உன் உடலில் ஓடுகிறது, அதைக் கண்டுபிடித்தாயா? அப்படியா ? என்றவாறே வியந்து சட்டமுனியை நோக்கி ”எமக்கு அதை காண அருள்வீரா” எனக்கேட்க , குண்டலினி ,கூடு விட்டு கூடுபாய்தல் ,பிராயணமப் பயிற்சிகளை பாம்பாட்டி சித்தர்க்கு சொல்லி மறைந்தார் சட்டைமுனி சித்தர் .தன் கடுமையான பயிற்சியால் பணத்தை தேடுவதை விட்டொழிந்து உலகில் யோகங்களை தேடி வெற்றிகண்டார் .பல சித்துகளை அற்புதங்களை நிகழ்தினார் . இவரை வணங்குபவர்களுக்கு ராகு கேது மற்றும் சர்ப்பதோஷ நிவர்த்தியாகும்
இவர் ஞானப்பாடல்கள், சித்தா ரூடம் என்ற விஷ வைத்திய நூல்களையும் எழுதியுள்ளார். மருதமலையில் தவம் செய்த பாம்பாட்டி சித்தரிடம் முருகன் அருள் விளையாட்டுகள் பல செய்துள்ளார். மருதமலையில் பாம்பாட்டி சித்தரை வழிபடும் பக்தர்களுக்கு விஷத்தினால் வரக்கூடிய தோஷங்கள் நிவர்த்தியடைவதுடன், சரும ரோகங்களும் தீர்க்கப்படுகின்றன.