விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய 150 கிலோ தங்கம் எங்கே? பிரதமர் ரணில் கேள்வி
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 150 கிலோ எங்கே போனது என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முன்னாள் அதிபர் ராஜபக்சே பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்த 3 லட்சம் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களிடம் இருந்த 150 கிலோ தங்கம் மற்றும் நகைகளை ராணுவம் பறிமுதல் செய்தது. இந்த நகைகளில் 30 கிலோ தங்கம் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், 80 கிலோ தங்கள் ராணுவத்தின் வசம் உள்ளதாகவும் கூறிய பிரதமர் ரணில், மீதியுள்ள 40 கிலோ நகை எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முன்னாள் அதிபர் ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் பேசினார்.