ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க முடியாது. புதிய மனு தாக்கலால் பரபரப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணை செய்ய முடியாது என மூத்த வழக்கறிஞர் பரமானந்த கட்டாரியா ரிட் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்ட மனு மீதான விசாரணை மீண்டும் இன்று தொடங்கிய நிலையில் ஜெயலலிதா சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பரமானந்த கட்டாரியா, புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் ‘7 ஆண்டுகள் தண்டனை அளித்தால் மட்டுமே மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க முடியும் என்றும், ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழக்கப்பட்டுள்ளதால் இந்த மேல்முறையீட்டு மனுவை, இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தான் நடத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் கூறியுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணை செய்ய முடியாது என்று முடிவு செய்தால் அந்த முடிவு அதிமுகவுக்கு பெரும் சாதகமாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.