அனைத்து தங்க நகைக்கடைகளிலும் ஒரே அளவு சேதாரம். வியாபாரிகளின் புதிய முடிவு

அனைத்து தங்க நகைக்கடைகளிலும் ஒரே அளவு சேதாரம். வியாபாரிகளின் புதிய முடிவு
gold jewelssssss
தங்க நகைகள் வாங்கும்போது சேதாரமாக ஒரு குறிப்பிட்ட தொகையை நகை வியாபாரிகள் வசூல் செய்வது அனைவரும் அறிந்ததே. போட்டி காரணமாக இந்த சேதாரத்தின் சதவீதம் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும் நிலையில் அனைத்து நகைகடைகளிலும் ஒரே அளவு சேதாரம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இன்று நடைபெற்ற தங்க நகை வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்து இருக்கிறோம். அதாவது, தங்க நகைகளுக்கான சேதாரம் ஒவ்வொரு கடைகளுக்கும் வித்தியாசப்பட்டு காணப்படும். அந்த வித்தியாசத்தை போக்கும் வகையில், அனைத்து தங்க நகை கடைகளிலும் ஒரே சேதாரத்தை கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதற்கு அனைத்து தங்க நகை வியாபாரிகளும் ஒத்துழைப்பு தந்து இருக்கிறார்கள். எங்களுடைய இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததும் இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை நாங்கள் செய்ய முடிவு செய்ய இருக்கிறோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் தங்க நகைகளுக்கு கலால்வரி ஒரு சதவீதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள தங்க நகைவியாபாரிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும், சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து தங்க நகை வியாபாரிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை காட்ட முடிவு செய்துள்ளதாகவும் ஜெயந்திலால் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply