துருக்கி: 24 வயது இளம்பெண் மனித வெடிகுண்டாக மாறி 37 பேர்களை கொன்ற கொடூரம்.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் சவாலாக இருந்து வருவது போன்று துருக்கி நாட்டில் குர்தீஸ் என்னும் தீவிரவாத அமைப்பு அந்த நாட்டில் பல வன்முறை மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பெண் வெடிகுண்டு ஒருவர் நேற்று துபாய் துருக்கி தலைநகர் அங்காராவில் தனது உடலில் பொருத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததால் 37 பேர் பரிதாபமாக பலியானதாகவும், சுமார் 125 பேர் வரை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
பெண் மனித வெடிகுண்டு வெடித்த இடம் அருகே பேருந்து நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் இருப்பதால் ஜனநெருக்கடியான பகுதியாக இருந்ததாகவும், இதனால் உயிரிழப்பு அதிகமாகியுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் குர்தீஸ் தீவிரவாத இயக்கத்தில் இருந்து வரும் இந்த மனித வெடிகுண்ட் பெண்ணுக்கு 24வயதுதான் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Chennai Today News: Shocking moment car bomb kills at least 37