2011 தோல்வி ஃபார்முலாவை கையில் எடுக்கும் கருணாநிதி

2011 தோல்வி ஃபார்முலாவை கையில் எடுக்கும் கருணாநிதி

karunanidhiபழம் நழுவி பாலில் விழும் என்று காத்திருந்த திமுக தலைவருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தனித்து போட்டி என்ற முடிவு அதிர்ச்சியை கொடுத்ததால் கருணாநிதி மட்டுமின்றி திமுக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி கடந்த 2011ஆம் ஆண்டு ஃபார்முலாவை கடைபிடிக்க திமுக முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 இடங்களிலும், ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயக பேரவை 2 இடங்களிலும், ஜே.எம்.ஆரூண் தலைமையிலான தமிழக முஸ்லிம் ஐக்கிய பேரவை 3 இடங்களிலும், குழ.செல்லையாவின் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஒரு இடத்திலும் போட்டியிட்டன. இந்த கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜகவுக்கு 21 இடங்களையும், புதிய தமிழகம் கட்சிக்கு 10 இடங்களையும்  மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு 6 இடங்களையும், புதிய நீதிக் கட்சிக்கு 5 இடங்களையும் , திருநாவுக்கரசரின் எம்ஜிஆர் அதிமுக வுக்கு 3 இடங்களையும் , ஆர்.எம்.வீரப்பனின் எம்ஜிஆர் கழகத்துக்கு 2 இடங்களையும் , கொங்குநாடு மக்கள் கட்சி, கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி ஆகியவற்றுக்கு தலா 1 இடத்தையும் திமுக ஒதுக்கியது.

இந்த தேர்தலில் 169 இடங்களில் போட்டியிட்ட திமுக கூட்டணி வெறும் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த 15ஆண்டுகளுக்கு முன்னர் தோல்வி அடைந்த இந்த கூட்டணி முறையை தற்போது மீண்டும் திமுக கையிலெடுத்துள்ளதாகவும், திமுகவுக்கு ஆதரவு என அறிவித்துள்ள 19 ஜாதி மற்றும் சிறுகட்சிகளை இணைக்க திமுக தலைவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி வலுவான அதிமுகவை எதிர்க்க போதுமா? என்பது குறித்து அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply