மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற இந்தியர்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற இந்தியர்
amarsingh
உலகம் முழுவதும் இந்தியர்கள் பல பெரிய பதவிகளை வகித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு இந்தியருக்கு மலேசியாவில் கெளரவமான பதவி ஒன்று கிடைத்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் போலீஸ் கமிஷனராக இந்தியரான அமர்சிங் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 58 வயது சீக்கியரான இவர், தாஜுதீன் முஹம்மது என்ற முன்னாள் போலீஸ் கமிஷனரிடம் இருந்து இந்த பதவியை கோலாலம்பூர் நகர போலீஸ் தலைமையகத்தில் பெற்றுக்கொண்டார்.

இந்தியரான தான் இந்த பதவிக்கு வந்ததன் மூலம் இந்நாட்டில் நிறம், மதம், குடும்பம் மற்றும் பொருளாதார பின்னணி ஆகியவை இன்றி நியாயமான திறமைக்கு மதிப்பு கிடைத்துள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளதாக அவர் பதவியேற்பின்போது தெரிவித்தார்.

அமர்சிங்கின் மூன்று தலைமுறைகள் மலேசிய நாட்டு காவல்துறையில் பணிபுரிந்துள்ளது. கடந்த 1900ஆம் ஆண்டே அமர்சிங்கின் முன்னோர்கள் மலேசியாவுக்கு சென்றுவிட்டனர். அமர்சிங்கின் பாட்டனார் மலேசியாவில் கான்ஸ்டபிளாகவும், அமர்சிங்கின் தந்தை மலேசிய வனத்துறையில் காவலராகவும் பணியாற்றியுள்ளனர். மூன்றாவது தலைமுறையாக அமர்சிங் தற்போது கோலாலம்பூர் நகரின் போலீஸ் கமிஷனராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply