தேமுதிக அலுவலகத்திற்கு திடீர் பூட்டு போடப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்துவிட்டதால் மற்ற கட்சிகள் போலவே தேமுதிக தலைமை அலுவலகமும் களை கட்டியுள்ளது. ஆனால் அந்த கட்சியின் அலுவலகத்தில் முன்பக்கம் பூட்டு போட்டு கேப்டன் உள்பட அனைவரும் பின்வாசல் வழியாகத்தான் வருகின்றார்களாம்.
இதுகுறித்து விசாரித்தபோது தேமுதிகவில் சீட்டு கேட்டு நேர்காணலுக்கு வந்தவர்களிடம் கேப்டன் கேட்ட முதல் கேள்வி உங்களால் இந்த தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பது தானாம். சீட்டு கிடைக்கும் என்ற ஆர்வக்கோளாறில் ஒவ்வொருவரும் ஒரு கோடி, இரண்டு கோடி என சொல்ல, முதலில் அந்த பணத்தை கட்சியில் கட்டுங்கள். கண்டிப்பாக உங்களுக்குதான் சீட்டு என்று கேப்டன் கூறியதாகவும், அதை நம்பி பலர் பணம் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது திமுகவுடன் கூட்டு இல்லை, தனித்து போட்டி என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால் பணம் கட்டிய பலர் எங்களுக்கு சீட்டே வேண்டாம், நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டு நச்சரித்து வருகின்றார்களாம். இவர்களை தவிர்க்கவே கேப்டன் பின்வாசல் வழியாக வந்து பின்வாசல் வழியாகவே போவதாக கூறப்படுகிறது.
ஆனால் “கேப்டனுக்கு டிராபிக் என்றாலே அலர்ஜி என்றும் முன்வாசல் வழியாக வந்தால் டிராபிக்கில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படுவதால் பின்பக்கமாக நெரிசலே இல்லாத ரூட்டில் உள்ளே வந்து விட்டு, போகும்போது முன்பக்கமாகப் போய்விடுவார் என்றும் இது அடிக்கடி கட்சி ஆபீஸுக்கு வருபவர்களுக்கு தெரியும் என்றும் தேமுதிக நிர்வாகிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி கூட்டணிப் பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அடிக்கடி மைக்கை நீட்டும் மீடியாக்காரர்களில் இருந்து தப்பிக்கவே பின்வாசல் வழியாக கேப்டன் வருவதாகவும், கேப்டன் யாரிடமும் சீட் தருவதாக ஒரு ரூபாய் கூட மோசடியாக வாங்கியது கிடையாது என்றும் இது அவரை பிடிக்காதவர்கள் கிளப்பிவிடும் வதந்தி என்றும் கூறப்படுகிறது. இவற்றில் எது உண்மை என்று அந்த ஆண்டவன் ஒருவனே அறிவான்.