விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரைக்கு மத்திய அரசு திடீர் தடை
டாக்டரிடம் செல்லாமலேயே காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திடீரென தடை விதித்துள்ளதால் அந்த மாத்திரையின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத்திரையின் தயாரிப்பையும் நிறுத்துவதாக பிரோக்டர் & கேம்பிள் ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது..
விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரையை தயார் செய்ய வலி நிவாரணிகள் மற்றும் ஆண்டிபாடிக் உட்பட 344 மருந்துகளை பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் பயன்படுத்தி வந்ததாகவும், ஆனாலும் இந்த மாத்திரையில் எந்த நோயையும் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி எதுவும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்ததை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாத்திரையை இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாராசிட்டாமல், பினைலெப்ரைன். காஃபைன் போன்ற மூலப்பொருட்களை பயன்படுத்தியே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு அந்த நிறுவனம் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Chennai Today News: Central Government ban Vicks Action 500 tablet